நம்மையறிந்தால்...
நானும் வாடிக்கிடக்கும் என் வலைப்பூவிற்கு தண்ணீர் தெளித்து புத்துணர்வு அளிக்க வேண்டும் என்று பல மாதங்களாக முயன்று கொண்டே இருந்தேன். நாட்கள் தான் போனதே தவிர உருப்படியாய் ஒன்றும் நடக்க காணோம். நேற்று, 2024 புத்தாண்டு பிறந்ததை காரணமாக வைத்து வலைப்பூவை புதுப்பித்து விடலாம் என்று ஓர் எண்ணம். என்ன எழுதுவது? நமக்கு நன்றாக வருவது அடுத்தவர்க்கு அறிவுரை தருவது தான். சரி, ஒரு அறிவுரை பதிவோடு மீண்டும் சமூகத்தொண்டை துவக்கி விட வேண்டியது தான் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே புத்தாண்டு வாழ்த்துக்களும், அது தொடர்பான பதிவுகளும் சமூக வலைத்தளப் பக்கங்களில் நிறைய துவங்கின. குறிப்பாக whatsapp statusல். அதில் இத்தனை வருடங்கள் இல்லாத ஒரு நல்ல மாற்றத்தை என்னால் காணமுடிந்தது. வழக்கமான வாழ்த்துப்பதிவுகளோடு, பலரும் சென்ற வருடம் தொடங்கிய போது அவர்கள் வாழ்க்கையில் எங்கே இருந்தார்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள், என்னென்ன சாதித்தார்கள் , என்னென்ன இழந்தார்கள் என்பதாக ஒரு சுய ஆராய்ச்சி செய்து பதிவுகளாக வெளியிட்டிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை, சாதித்...