இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒற்றைக்கொலுசு (சிறுகதை)

படம்
 அ திகாலையில் வழக்கம் போல் எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அது ஒன்றும் பெரிய பூங்கா இல்லை. ஆனால், சிறியதாக இருந்தாலும் இந்த பகுதி மக்களால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும், கொன்றை,நாவல்,அரசு முதலிய மரங்களும், நடைப்பாதையை ஒட்டி பலவகையான பூச்செடிகளும், ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல் முதலான சாதனங்களும், நடுவில் வட்ட வடிவில் செயற்கை நீருற்றும், சரியான இடைவெளியில் மின்விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் உண்டு. அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். மாலையில் நடைபயிற்சி செய்வோர், விளையாட சிறுவர்,சிறுமியர், காற்று வாங்கி கதை பேச வருபவர்கள் என பலரும் வருவார்கள். நான் அலுவலகத்தில் இருந்து வர நேரமாகும் என்பதால் அதிகாலையிலேயே சுமார் பத்து சுற்றுகள் நடந்துவிட்டு போய் விடுவேன். மாலையில் என் மனைவி என் ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்து மற்ற சிறுவர்களோடு விளையாட விட்டுவிட்டு, தானும் தோழிகளோடு பேசி பொழுதைப்போக்கி விட்டு வந்துவிடுவாள். இன்று நான் நடக்க ஆரம்பித்த போது, பூங்காவில் வயதான ஆண்கள் இரண...

ஹே சினாமிகா...!

படம்
    “ஹே சினாமிகா” ரிலீஸ் ஆகி இன்னியோட ஒரு மாசம் ஆகிடிச்சு. ஆனா, ஒ.டி.டி. ல நாலு நாட்கள் முன்னாடிதான் ரிலீஸ் ஆகியிருக்கு. அதனால இப்போ இந்த ரிவ்யூ சரியாத்தானிருக்கும். முதல் படத்தை இயக்கியிருக்கிற பிருந்தா மாஸ்டருக்கு வாழ்த்துகள். ஆஸ் யூஸ்வல் முக்கோண காதல் கதை தான். ஆனா, வித்தியாசமா சொல்லியிருக்காங்க.   துல்ஹர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் மூணு பேருக்கும் நடுவுல ஆன் ஸ்க்ரீன்ல டப் காம்படீஷன்னா ஆப் ஸ்க்ரீன்ல டிரெக்டர் பிருந்தா மாஸ்டர், மியூசிக் டிரெக்டர் கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராமன் மூணு பேரும்  ஒருத்தருக்கொருத்தர் சளைக்காம வேலை செஞ்சிருக்காங்க.   பாண்டிச்சேரியோட அழக நாம பார்க்காத  அற்புதமான கோணங்கள்ல கேமரால பதிவு பண்ணியிருக்காங்க ப்ரீதா.  கோவிந்த் வசந்தா காதல் கதையோட உயிரோட்டத்தை படம் முழுக்க பொழிஞ்சிருக்கார். குறிப்பாக “யாரிசைக்க வருகுவதோ...” பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் இதயத்தை ஊடுருவுகிறது. பிருந்தா அவர்களுக்கு  முதல் படம்ன்னு சொன்னா நம்பவே முடியாது. கதை, வசனம், பாடல்கள் எல்லாத்துலயும் சூப்பரா ஸ்...